×

திருமணத்தில் சத்தமான பாட்டுக் கச்சேரி… அடுத்த நாளே மாப்பிள்ளைக்கு நடந்த சோகம் !

தெலங்கானா திருமணத்தில் பாட்டுக் கச்சேரி இரைச்சலாக இருந்ததால் உடல் நலிவுற்ற மணமகன்  அடுத்த நாளே மாரடைப்பு வந்து இறந்துள்ளார்.

 

தெலங்கானா திருமணத்தில் பாட்டுக் கச்சேரி இரைச்சலாக இருந்ததால் உடல் நலிவுற்ற மணமகன்  அடுத்த நாளே மாரடைப்பு வந்து இறந்துள்ளார்.

தெலங்கானாவில் கணேஷ் என்பவருக்கு கடந்த 13 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. அது சம்மந்தமாக திருமண நிகழ்வின் போது பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் அதிக அளவு சத்தத்துடன் கூடிய பாடல் இசைக்கப்பட்டுள்ளது. அப்போதே மாப்பிள்ளை மிகவும் சோர்வாக இருந்துள்ளார்.

இதையடுத்து அடுத்த நாள் மயக்கமடைந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அந்த குடும்பத்துக்கு பேரிடியாக அமைந்துள்ளது. அதிக சத்தத்துடன் கூடிய பாட்டுக் கச்சேரியே தங்கள் மகனின் மரணத்துக்குக் காரணம் என கணேஷின் பெற்றோர் சொல்லியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News