Categories: Cinema News latest news throwback stories

வரலாறு தெரியாம படம் எடுக்கலாமா? – சிவாஜி படத்தில் நடந்த பெரும் தவறு!..

தமிழ் நடிகர்களில் நடிகர் திலகம் என அனைவராலும் அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். நடிப்புக்கே அவரை ஆசான் என கூறலாம். தமிழில் சிறந்த நடிகர்களான கமல்ஹாசன் முதற்கொண்டு பலரும் சிவாஜி கணேசனை புகழ்ந்து பேசுவதை காண முடியும்.

ஏனெனில் அதிகப்பட்சமான கதாநாயகர் நடிகர்கள் ஒரே மாதிரியான கதை அம்சத்தில் படம் நடிக்கின்றனர். ஒரு பெரும் எதிரியை வீழ்த்தும், பத்து பேரை ஒரே அடியில் வீழ்த்தும் நடிகர்களாக இவர்கள் உள்ளனர். ஆனால் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவராக சிவாஜி கணேசன் இருந்தார்.

சிவாஜி கணேசனின் திரைப்படங்களில் சண்டையே இல்லாவிட்டாலும் கூட அவரது திரைப்படங்கள் வெற்றிபெரும். சிவாஜி நிறைய புராண, இதிகாச கதைகளில் நடித்துள்ளார். அதே போல வரலாறு தொடர்பான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அப்படி நடித்த திரைப்படங்களில் திருவிளையாடல், வீரப்பாண்டிய கட்டபொம்மன், ராஜ ராஜ சோழன் போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை. ராஜ ராஜ சோழன் திரைப்படம் 1973  ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.பி நாகராஜன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

படத்தில் நடந்த தவறு:

அந்த திரைப்படத்தின் சிவாஜிக்கு ஆரம்ப காட்சியே ஒரு சிற்பியுடன் அமைந்திருக்கும். தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமான பணிகள் நடந்துக்கொண்டிருக்கும்போது நந்தியை செதுக்கும் சிற்பிக்கு சிவாஜி கணேசன் வெற்றிலை மடித்து கொடுக்கும் காட்சி வரும்.

ஆனால் அந்த முதல் காட்சியே தவறு என வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் ராஜ ராஜ சோழன் பெரிய கோவிலை கட்டும்போது அதில் நந்தியே வைக்கவில்லை. அவருக்கு பின்னால் வந்த நாயக்கர்கள் அவர்களின் ஆட்சியில்தான் நந்தி சிலையை பெரிய கோவிலில் வைத்துள்ளனர் என கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த விஷயம் ஒரு வேளை இயக்குனருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது அப்போதைய காலக்கட்டத்தில் இந்த ஆய்வு வெளியிடப்படமால் இருந்திருக்கலாம் என ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அந்த சம்பவத்துக்கு பிறகு வாழ்க்கையே வெறுத்துட்டேன்… முதல் படத்துலேயே நொந்து போன பார்த்திபன்!..

Published by
Rajkumar