×

ஒருவழியாக கைகூடிய பிராஜக்ட்… அருண் விஜய் சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமையும் திரைப்படம்!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யா ஹரியின் அருவா கதையை நிராகரித்ததை அடுத்து அந்த கதையை தன் மைத்துனர் அருண் விஜய்யை வைத்து இயக்க முடிவு செய்தார் ஹரி. ஏறுமுகத்தில் செல்லும் அருண் விஜய்க்கு இந்த கதை திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இந்த படத்துக்காக போடப்பட்ட பட்ஜெட்டில் இருவரின் சம்பளமும் பெரும்தொகையை எடுத்துக் கொண்டுள்ளதாம்.

அதனால் அந்த படத்தை தயாரிக்க சினிமா தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள். அதனால் அந்த படத்திற்கான எந்த வித முன்னேற்றமும் இல்லை என சினிமா வட்டாரத்தில் சொல்ல்ப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த படத்தை அருண் விஜய்யின் நண்பரான இந்தர்குமார் தயாரிக்க முன் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தில் அவரே ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்நிலையில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் மிக அதிக பட்ஜெட் திரைப்படம் என்ற சாதனையை இந்த படம் நிகழ்த்த உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News