×

விக்ரம்முக்கு ஒரு துருவ நட்சத்திரம்… தனுஷுக்கு வால் நட்சத்திரம்!

நடிகர் தனுஷ் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்துக்கு வால்நட்சத்திரம் என பெயர் சூட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

நடிகர் தனுஷ் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்துக்கு வால்நட்சத்திரம் என பெயர் சூட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குனர் ராம்குமார் தமிழ் சினிமாவில் கவனிக்கத் தகுந்த ஒரு இயக்குனராக உருவாகி வருகிறார். அவர் இயக்கிய இரண்டு படங்களுமே வேறு வேறு தளங்களில் இருந்தன. இந்நிலையில் தனது அடுத்தப் படத்தில் தனுஷை இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்கான திரைக்கதைக்காக அவர் ஒரு வருடத்துக்கும் மேல் எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது திரைக்கதையை முழுவதுமாக முடித்துள்ள ராம்குமார் படத்துக்கான அருமையான தலைப்போடு வந்துள்ளாராம். இந்த படத்துக்கு அவர் வால் நட்சத்திரம் எனத் தலைப்பு வைத்துள்ளாராம். அடுத்த கட்டமாக ப்ரி புரொடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ள உள்ள அவர் விரைவில் படப்பிடிப்பை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News