Categories: Cinema News latest news

அந்த நடிகர் தான் வேணும்… அடம்பிடித்த சூப்பர் ஸ்டார்.! ரசிகர்கள் தான் ரெம்ப பாவம்.!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படம் தயாராக உள்ளது, இதன் சூட்டிங் விரைவில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில், நடிகை தமன்னா ஹீரோயின் நடிக்கிறார் என்றும் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அவ்வப்போது இணையத்தின் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில், அண்மையில் ஒரு தகவல் இணையத்தில் வெகு வைரலாக பரவி வந்தது. அதாவது வைகைப்புயல் வடிவேலு நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

 

தற்போது வெளியான தகவலின் படி, வடிவேலு இந்த படத்தில் கிடையாது. நெல்சனின் ஆஸ்தான காமெடி நடிகர் யோகி பாபு தான் இந்த படத்திலும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது தர்பார் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் யோகி பாபு இணைய உள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்களேன் – பாலிவுட் கவர்ச்சி புயலை தட்டி தூக்கிய சூர்யா.! விவரம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..

பேட்டை திரைப்படத்தில் ரஜினியுடன் முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருந்தார். முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு ரஜினி சிபாரிசு செய்ததன் பெயரில் யோகி பாபு உடன் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அப்போது யோகி பாபுக்கு கால்ஷீட் கிடைக்கவில்லை. அதேபோல் தற்போதும் ரஜினி தான் ஒருவேளை வடிவேலு வேண்டாம் என்றும் யோகி பாபுவை ஓகே  என சிபாரிசு செய்திருப்பார் என சிலர் கூறி வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan