Categories: Cinema News latest news

எங்க அப்பா ஒரு லெஜண்ட்!… தவறான தகவல் வேதனையளிக்கிறது.. ஏ.ஆர் ரகுமான் மகன் உருக்கம்!…

தனது தந்தை ஏ.ஆர் ரகுமான் குறித்து வரும் தவறான தகவல் வேதனை அளிக்கின்றது என அவரது மகன் அமீன் கூறியிருக்கின்றார்.

இந்திய சினிமாவில் இசைப்புயல் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவரின் விவாகரத்து செய்திதான் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. யாரும் எதிர்பாராத நேரத்தில் ஏ.ஆர் ரகுமான் மனைவி சாய்ரா தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக ஏ ஆர் ரகுமானை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டார்.

இதையும் படிங்க: மாநாட்டுல விஜய் பேசியதைப் பார்த்து மிரண்டுட்டேன்… எஸ்ஏ.சந்திரசேகரா இப்படி சொல்றாரு?

இந்த செய்தி வெளியான போது இது வதந்தியாக இருக்கலாம் என்று பலரும் எண்ணி வந்தார்கள். ஆனால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த விவகாரத்து தகவலை உறுதி செய்யும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு பிறகு தான் இந்த செய்தி உண்மை என்பது உறுதியானது.

29 ஆண்டுக்காலம் சேர்ந்து வாழ்ந்து விட்டு இப்படி ஒரு முடிவை ஏன் எடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க ஏ.ஆர் ரகுமான் மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்தில் ஏ.ஆர் ரகுமான் இசைக்குழுவில் இருக்கும் கிதார் வாசிப்பாளர் மோகினி டே தனது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ARR sairabanu

ஏ.ஆர் ரகுமானையும் மோகினி டேயையும் வைத்து சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கிசுகிசுக்கள் எழுதிக் கொண்டு வருகிறார்கள். ஏ.ஆர் ரகுமான் விவாகரத்துக்கு காரணம் மோகினி டே தான் என்று பத்திரிகைகளில் தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றது. எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு சர்ச்சை பரவி வரும் நிலையில் ஏ ஆர் ரகுமான் மகன் அமீன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘எனது தந்தை ஒரு லெஜன்ட்.. தன் படைப்புகளால் மட்டுமல்ல.. பண்பு, அன்பு, மரியாதை என அனைத்திலும் ஒரு லெஜெண்டாக இருக்கின்றார். அவரைப் பற்றி இப்படி அடிப்படை ஆதாரமற்ற தவறான தகவல்கள் பரவுவது வேதனை தருகின்றது. இன்னொருவர் வாழ்க்கையை பற்றி பேசுகையில் அதில் உண்மையும் மரியாதையும் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

இதையும் படிங்க: கோட் மொத்த வசூலை 23 நாளில் காலி செய்த அமரன்.. இன்னும் இருக்கு? இத பாருங்க!..

தவறான தகவல்களை பரப்புவதை தயவு செய்து ஊக்குவிக்காதீர்கள். அவருடைய கண்ணியத்தையும், அவர் நம் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தையும் போற்றிப் பாதுகாப்போம்’ என்று வேதனையுடன் பதிவிட்டிருக்கின்றார். இந்த பதிவு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

ramya suresh
Published by
ramya suresh