×

தேசிய விருதை வென்ற படங்கள்
ஓர் சிறப்பு பார்வை

 
asuran

அவர்கள் ரசிப்புத்திறன் மிக்கவர்களாக இருந்தால் இது விருதுக்குரிய படம் இப்படித்தான் இருக்கும். இதை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.  

தேசிய விருதுக்கான படங்கள் 1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது. திரைப்படங்களின் தரத்தைத் தீர்மானிப்பவை விருதுகள் தான். படத்தை ரசித்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணம் ஏற்படத் தூண்டுகோலாய் இருப்பவை இந்த விருதுகள் தான். சாதாரணமாக படம் பார்ப்பவர்களுக்கு ஏமாந்து போனோமே...இந்தப் படத்திற்கா நாம வந்தோம் என்று படம் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் செல்வர். ஆனால், அவர்கள் ரசிப்புத்திறன் மிக்கவர்களாக இருந்தால் இது விருதுக்குரிய படம் இப்படித்தான் இருக்கும். இதை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.  

1954ல் வெளியான எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்க்தில் வெளியான மலைக்கள்ளன் படம் ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் பெற்றது. ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ்படம் இதுதான். 2019ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு 2021ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷ_க்கு  கிடைத்தது.  

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளில் ரிக்ஷாக்காரன் படத்திற்காக எம்ஜிஆருக்கும், மூன்றாம்பிறை, நாயகன் இந்தியன் படங்களுக்காக கமல்ஹாசனுக்கும், பிதாமகன் படத்துக்காக விக்ரமுக்கும், காஞ்சிவரம் படததிற்;காக  பிரகாஷ்ராஜூக்கும், ஆடுகள் படத்துக்காக தனுஷ_க்கும் கிடைத்துள்ளது. நடிகைகளில் தென்மேற்கு பருவக்காற்று படத்துக்காக சரண்யா பொன்வண்ணனுக்கும், பருத்தி வீரன் படத்திற்;காக பிரியாமணிக்கும், வீடு படத்திற்காக அர்ச்சனாவுக்கும், சிந்து பைரவி படத்திற்காக சுஹாசினிக்கும், பசி படத்திற்காக ஷோபாவுக்கும், சிலநேரங்களில் சில மனிதர்கள் படத்திற்காக லட்சுமிக்கும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பெற்ற தமிழ்படங்கள் ஏராளமாக இருந்தாலும் ஒரு சிலவற்றை இங்கு பார்க்கலாம். 

மலைக்கள்ளன் 

1954ல் வெளியான எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்க்தில் வெளியானது. இதில் எம்ஜிஆர், பானுமதி, ஸ்ரீராம் மற்றும் பலர் நடித்தனர். இப்படம் 6 மொழிகளில் வெளியானது. கதை வசனத்தை மு.கருணாநிதி எழுதியிருந்தார். எத்தனை காலம் தான் என்ற புகழ்பெற்ற பாடல் இடம்பெற்ற படம் இதுதான்.  

பாகப்பிரிவினை 

1959ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பாகப்பிரிவினை. இதில் சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா, எம்.என். நம்பியார், டி.எஸ்.பாலையா, சரோஜாதேவி, எஸ்.வி.சுப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு 1960ல் சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தில இடம்பெற்ற தாழையாம்பூ முடிச்சி...., தேரோடும் ...எங்கள், தங்கத்திலே ஒரு குறையிருந்தால் ...போன்ற பாடல்கள் முத்தானவை. 

களத்தூர் கண்ணம்மா 

உலகநாயகன் கமல்ஹாசன் அறிமுகமான படம். முதல் படத்திற்கே தேசிய விருது கிடைத்துள்ளது. இதில் கமலுக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1960ல் வெளியான படம். ஜெமினிகணேசன், டி.எஸ்.பாலையா, சாவித்ரி நடித்த இப்படத்தில் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார். தகாத சூழ்நிலை காரணமாக பிரிந்து போன தம்பதிகளையும் அவர்களுக்கு பிறக்கும் அப்பாவி மகனையும் அவன் அனாதை இல்லத்தில் வளர்வதைப்பற்றியும் இப்படம் தத்ரூபமாக சொல்கிறது. இப்படம் தெலுங்கு, இந்தி மற்றும் சிங்கள மொழிகளிலும் ரிலீஸானது. படத்தில், கண்களின் வார்;த்தைகள் மற்றும் அம்மாவும் நீயே..அப்பாவும் நீயே பாடல்கள் மண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. 

அஞ்சலி 

1990ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் ஷாமிலி, ரகுவரன், ரேவதி, பிரபு ஆகியோர் நடித்தனர். இப்படத்தின் கதை இதுதான். இருகுழந்தையைப் பெற்ற தாய்க்கு தன் 3வது குழந்தை மனநோயாளி என தெரியாமல் போகிறது. கணவனும் இதை மறைத்து விடுகிறான். பின்னாளில் இது தெரியவர, அக்குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பிக்கின்றனர். அவளுக்கு ஆரம்பத்தில் சகோதரர்களின் அரவணைப்பு கிடைக்காமல் போகிறது. இறுதியில் கிடைக்கிறது. ஆனால் அவள் அவர்களை விட்டு பிரிந்து விடுகிறாள். படத்தில் சிறுவர்களின் சேட்டையையும், அவர்களது குணாதிசயங்களையும் வெகு அழகாக சொல்லியுள்ளார் மணிரத்னம். இப்படத்தில் அஞ்சலி பாப்பாவாக நடித்த ஷாமிலியின் நடிப்பு அற்புதம். 1991ல் இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. மொட்ட மாடி.. மொட்ட மாடி..., அஞ்சலி..அஞ்சலி...அஞ்சலி.., இரவு நிலவு ஆகிய பாடல்கள் சூப்பர்ஹிட்.

மகாநதி 


1994ல் இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. அதன்படி சிறந்த படத்திற்காகவும், சிறந்த ஒலியமைப்புக்காகவும் தேசிய விருது பெற்ற படம் மகாநதி. அரசின் விருதையும் இப்படம் பெற்றது. சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமல்ஹாசன், சுகன்யா, பூர்ணம் விசுவநாதன், மகாநதி சங்கர் உள்பட பலர் நடித்தனர். அன்பான தாயை, பேய்களா...பூதமா.., பொங்கலோ பொங்கல்..., ஸ்ரீரங்கரங்க நாதனின் ஆகிய பாடல்கள் தெவிட்டாத தேனமுதைப் படைப்பவை. தன் மகள் விபசார விடுதியில் இருக்கிறாள் என்பதை அறிந்த கமல் முகத்தில் எத்தனை எத்தனை உணர்வுகள்...அழுகை, ஆவேசம், பரிதவிப்பு, நடுக்கம் ஆகிய உணர்வுகளை ஒருசேர காட்டியிருப்பார் கமல்ஹாசன். அற்புதமான நடிப்பு அது.

கன்னத்தில் முத்தமிட்டால் 
2002ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் கன்னத்தில் முத்தமிட்டால். இலங்கை பிரச்சனையைக் கதைக்கருவாக கொண்ட இப்படத்தில் மாதவன், சிம்ரன், நந்திதாதாஸ், பி.எஸ்.கீர்த்தனா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்தனர். இப்படத்தில் பார்த்திபன் மகள் தான் கீர்த்தனா. அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கன்னத்தில் முத்தமிட்டால், விடை கொடு எங்கள் நாடே...பாடல்கள் அருமை. 

வாரணம் ஆயிரம் 
2008ல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இப்படத்தில் சூர்யா தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். சமீரா ரெட்டி, திவ்யா பந்தனாஸ், சிம்ரன் ஆகியோர் நடித்தனர். தந்தை மகன் இடையே நிகழும் சுவையான உணர்வுகள். இப்படம் தேசிய விருது பெற்றது. அடியே கொல்லுதே.., நெஞ்சிக்குள் பெய்திடும் மாழை..பாடல்கள் இனிமையானவை.  

தென்மேற்கு பருவக்காற்று

இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிப்புக்காக சரண்யாவுக்கும், சிறந்த பாடக்காக வைரமுத்துவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. 2010ல் வெளியான இப்படத்தில் விஜய்சேதுபதி அறிமுகம் ஆகியிருப்பார். படத்தின் இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல்...இன்பச்சாரல் என்ற பாடலும், மனது மறக்காதவை. 

வாகை சூடவா

2011ல் விமல் நடிப்பில் வெளியான படம் வாகை சூடவா. இப்படத்தில் இனியா, பாக்யராஜ், பொன்வண்ணன் ஆகியோரும் உடன் நடித்திருப்பர்.ள  இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இது நகைச்சுவை கலந்த காதல் படம். அனிதா கார்த்திகேயன் பாடிய செங்க சூள காரா...பாடல் பிரபலமானது. 

ஜோக்கர் 

2016ல் வெளியான படம் ஜோக்கர். ராஜூ முருகன் இயக்கத்தில் குரு சோம சுந்தரம் நடிப்பில் வெளியானது. இப்படத்தில் ரம்யா பாண்டியன், காயத்ரி, பவா செல்லத்துரை, ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். 2017ல்  சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.
என்னங்க சார் உங்க சட்டம் பாடல் மறக்க முடியாதது. அறநந்தை பாவா, பெருமாள் ஆகியோர் பாடினர். ஜாஸ்மினு பாடலை சுந்தரய்யர் பாடினார். இந்தப்படம் சமூகத்தில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது. படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம். அலட்டல் இல்லாத அற்புத நடிப்பு. ஒரு அறிமுக நடிகரா இவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார் என எண்ணத் தோன்றும்.

From around the web

Trending Videos

Tamilnadu News