அமிதாப் பச்சன் உயிருக்கே ஆபத்து?.. பீதியை கிளப்பிய வெடிகுண்டு மிரட்டல்!..

 
amitabh

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் இமேயில் வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மும்பை போலீஸ் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமிதாப் பச்சன் தற்போது கல்கி 2898 AD படத்தின் இரண்டாம் பாகத்தில்  நடித்து வருகிறார். மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள டெக்ஸ்லா படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை மேயர் ரிது தாவ்தேவுக்கு வந்த இமேயிலில் அமிதாப் பச்சனின் ஜல்சா வீட்டில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 27ஆம் தேதிக்குள் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டயதாக கூறப்படுகிறது. மேலும், பிரபல பாடகர் தில்ஜித் தோசாஞ்சின் இசை நிகழ்ச்சியிலும் வெடிகுண்டு வெடிக்கும் என எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே நடிகர் டைகர் ஷெராஃப் மீது சமீபத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அமிதாப் பச்சன் வீட்டுக்கு வந்துள்ள மிரட்டல் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

From Around the web