Connect with us

Cinema News

மணிரத்னத்திற்கே நோ சொன்ன சின்னத்திரை பிரபலம்.. இப்படியெல்லாம் நடந்துச்சா?

நடிகர், நடிகையரை பொறுத்தவரை சில இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கு வெகுவாக காத்திருப்பார்கள். ஏனெனில் அந்த இயக்குனர்கள் இயக்கும் திரைப்படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும். எனவே அவர்களது திரைப்படங்களில் நடிக்கும்போது இவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

உதாரணமாக இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படங்களில் நடிப்பதற்கு பலர் போட்டி போடுகிறார்கள் அல்லவா? அதே மாதிரி தமிழ் சினிமாவில் பெரும் இயக்குனராக இருப்பவர் இயக்குனர் மணிரத்னம். இப்போதும் கூட குறைந்த சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை என மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் ஆவல் காட்டி வருகின்றனர்.

ஆனால் மணிரத்னமே ஒரு நடிகைக்கு வாய்ப்பு தர முன் வந்தும் அவர் அந்த வாய்ப்பை மறுத்த நிகழ்வுகளும் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. சன் டிவியில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வந்த நிகழ்ச்சி பெப்ஸி உங்கள் சாய்ஸ்.

பெப்ஸி உமா என அழைக்கப்படும் தொகுப்பாளர்தான் இந்த நிகழ்ச்சியை அத்தனை வருடமாக நடத்தி வந்தார். பெப்ஸி உமா சின்னத்திரையில் அறிமுகமான புதிதில் அவருக்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள். இதனால் சினிமா துறையில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் பெப்ஸி உமாவிற்கு அதிகமாகவே வந்தது.

வாய்ப்பை மறுத்த நடிகை:

இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் அப்போது ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார். பெப்ஸி உமாவை பற்றி கேள்விப்பட்ட மணிரத்னம் தனது படத்தில் கதாநாயகியாக நடிக்குமாறு பெப்ஸி உமாவிடம் கூறியுள்ளார்.

ஆனால் பெப்ஸி உமா அந்த கோரிக்கையை மறுத்துவிட்டார். மேலும் சினிமாவில் தனக்கு சுத்தமாக ஆர்வம் கிடையாது. நான் தொகுப்பாளராகவே இருந்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். இதே போல கமல் மற்றும் ரஜினியுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தபோதும் மறுத்துள்ளார் பெப்ஸி உமா.

சினிமாவில் இவர்களுடன் நடிக்க முடியாதா? என பலரும் ஏங்கி கொண்டிருந்த சமயத்தில் கூட அத்தனை வாய்ப்புகளையும் மறுத்துள்ளார் பெப்ஸி உமா.

இதையும் படிங்க: ‘வின்னர் படத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்!.. பிரசாந்த் ஃபீல்டுஅவுட் ஆனதுக்கு காரணமே இதுதான்!..

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top