நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட!.. வடிவேலு காமெடி ரகசியத்தை உடைத்த இயக்குனர்!..

வடிவேலு காமெடி ஒன்றின் ரகசியத்தை இயக்குனர் உடைத்திருக்கிறார்..
 

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. பல திரைப்படங்களின் வெற்றிக்கு இவர் காரணமாக இருந்திருக்கிறார். அதில் ஒரு திரைப்படம்தான் வாத்தியார். இந்த படத்தை இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார். மேலும் மணிவண்ணன், பிரகாஷ் ராஜ், மல்லிகா கபூர், சுஜாதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஒரு அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட திரைப்படமாக இந்த படம் 2006ம் வருடம் வெளியானது.

நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட!.. வடிவேலு காமெடி ரகசியத்தை உடைத்த இயக்குனர்!..

இந்த திரைப்படத்தில் வடிவேலுவிடம் ‘நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட’ என சிங்கமுத்து மற்றும் மனோபாலா ஆகியோர் சொல்வார்கள். ‘நான் எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு சொல்லுங்க’ என வடிவேல் கேட்டுகொண்டே இருப்பார். ஆனால், கடைசி வரைக்கும் அவர்கள் சொல்லமாட்டார்கள்.. வடிவேல் அழுது கொண்டே கூட கேட்பார். ஆனால் அவர்கள் சொல்லவே மாட்டார்கள். அந்த காமெடி அப்படியே முடிந்துவிடும்..

இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் ‘வாத்தியார் படத்தில் நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்னு ஒரு காமெடி வரும்.. அந்த காட்சியில் ‘ஊர்ல மழை இல்ல.. அதனால ஒரு பிரம்மச்சாரி பையன் துணி இல்லாம ஊரை சுத்தி வந்தா மழை வரும்னு ஒரு ஐதீகம்.. அதனால உன்ன சொல்லியிருக்காங்க.. ஆனா நீ கருப்பா பயங்கரமா இருக்க.. அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே’ன்னுதான் வசனம் வரும்.. ஆனா நான்தான் இந்த டயலாக் வேணாம்.. கடைசி வரை எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லவே வேணாம்னு சொல்லிட்டேன்‘
எனக் கூறியிருக்கிறார்..

From Around the web