திடிரென காலில் விழுந்த பெண்.. ஷாக் ஆன விஜய்
நடந்து முடிந்த சட்டபேரவை தேதலில் தமிழக வெற்றி கழகம் அமோக வெற்றி பெற்று விஜய் முதல்வரானார். நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
பதவி ஏற்றது முதலே அவர் பல புதிய விசயங்களை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று எம்.எ.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் விஜய் தமிழக முக்கிய அரசியல் தலைவர்களை அவர்கள் வீட்டிற்கே சென்று சந்தித்தார். முதலில் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று சந்தித்தார். இதையடுத்து மறுமலர்ச்சி திராவிட கழக தலைவர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது வைகோ தனது வீட்டில் பணியாற்றும் பெண்களை அழைத்தார். விஜயை கண்டதும் அவர்கள் துள்ளி குதித்தனர். அதில் ஒரு பெண் அவருக்கு கைகளால் திருஷ்டி கழித்தார். உடனடியாக விஜய் அந்த பெண்ணிற்கு தனது கைகளால் திருஷ்டி கழித்தார்.
அப்போது அருகிலிருந்து ஒரு பணிப்பெண் திடீரென விஜய் காலில் விழுந்தார். இதனை எதிர்பார்க்காத விஜய் அய்யோ அம்மா என்று கூறி அந்த பெண்ணை எழ சொன்னார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Love how the lady Drishti Sutharadus for CM Vijay and he does it right back!! pic.twitter.com/GdFVHS5PvO
— Akshita Nandagopal (@Akshita_N) May 11, 2026
