×

காதலியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்த இளைஞன்! துணிந்து இறங்கிய பெண் !

தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னை காதலிப்பதாக ஏமாற்றி உடலுறவுக் கொண்டு அதை வீடியோவாக எடுத்து மிரட்டிய நபர் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னை காதலிப்பதாக ஏமாற்றி உடலுறவுக் கொண்டு அதை வீடியோவாக எடுத்து மிரட்டிய நபர் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

தூத்துகுடி மாவட்டம் தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினித். இவர் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரைத் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். மேலும் அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

அதன் பின்னர் அந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடியாது எனவும், ஏதாவது பிரச்சனை செய்தால் அந்த வீடியோவை வெளியில் பரப்புவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதற்குப் பயப்படாத அந்த பெண் தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதையடுத்து மாவட்ட சூப்ரண்ட் அலுவலகத்தில் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு உண்டாக வினீத்தைக் கைது செய்து விரைவில் அந்த வீடியோவைக் கைப்பற்றுவோம் என போலீஸார் உறுதியளித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News