குட் பேட் அக்லி எப்படி வந்திருக்கு? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்
விடாமுயற்சி:
அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. சமீபத்தில் தான் அஜித் குட் பேட் அக்லி படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார். அதற்காக ஒரு தனி விமானத்தில் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் புறப்பட்டு சென்ற வீடியோ வைரலானது.
இந்த நிலையில் சென்னை திரும்பிய ஆதிக் ரவிச்சந்திரனிடம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு குட் பேட் அக்லி திரைப்படத்தை பற்றி கேள்விகளை கேட்டனர். குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி வந்திருக்கிறது என ஆதிக் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எனக் கூறிவிட்டு முதலில் விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசாக இருக்கின்றது.
அந்த படம் முதலில் வெளியாகட்டும். அதன் பிறகு குட் பேட் அக்லி திரைப்படத்தை பார்க்கலாம் என சொல்லிவிட்டு சென்றார். இது அவருடைய ஒரு நல்ல மனிதாபிமானத்தை காட்டுகிறது. ஏனெனில் விஜய் படமான லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தை பற்றி ஒரு சின்ன அப்டேட் கொடுத்து லியோ திரைப்படத்தைப் பற்றிய ஒரு ஆர்வத்தை ரசிகர்களிடம் குறைக்க வைத்தார் .
அந்த சமயத்தில் விஜய் கூட வெங்கட் பிரபுவை அழைத்து திட்டியதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் ஆதிக்ரவிச்சந்திரன் தன்னுடைய படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்காமல் தன் படத்திற்கு முன்னாடி ரிலீஸ் ஆகக்கூடிய விடாமுயற்சி படத்தை பற்றி இப்படி சொன்னது ஆதிக்கரவிச்சந்திரன் மீது ஒரு தனி மரியாதையை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
இப்போது இரண்டு படங்களின் வேலைகளையும் அஜித்து நல்ல முறையில் முடித்து விட்டார் .அடுத்ததாக அவர் ஐரோப்பாவில் நடக்கும் கார் ரேஸ் பந்தயங்களில் கவனம் செலுத்த போய்விடுவார். இனி அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு அடுத்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் என கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசாகும் நிலையில் குட் பேட் அக்லி அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.