×

உதவி இயக்குனர்களுக்கு வீடு தேடி சென்று உதவும் நடிகர் ஆதி...!

கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட உதவி இயக்குனர்களுக்கு நடிகர் ஆதி, Let's the Bridge என்ற அமைப்பின் மூலம் உதவி செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், " ஊரடங்கில் பாதிக்கப்பட்டு சாப்பாட்டிற்கே சிரமப்படும் உதவி இயக்குனர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க முடிவு செய்து ஒரு பட்டியல் உருவாக்கி .கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், நெசப்பாக்கம், வளசரவாக்கம், உட்பட சென்னையில் உள்ள சில பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.

 

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. சாப்பாட்டிற்கே வழியின்றி தவிக்கும் மக்களுக்கு அரசாங்கம் தேவையான உதவிகளை செய்து வருகிறது. மேலும் நிறைய அறக்கட்டளைகள் , தொண்டு நிறுவனங்கள் , பிரபலங்கள் என அனைவரும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆதியின் இந்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News