×

நீயெல்லாம் பிக்பாஸ் போறீயா! அசிங்கப்படுத்திய உறவுகள்... கண்ணீர் விட்ட குட்டி!

தாங்கள் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் ஆஜித், ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோரின் ஷார்ட் அண்ட் ஸ்வீட் பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது. சொல்ல வந்ததை எந்தவித அழுகையும் இல்லாமல் பக்குவமாக எடுத்துரைத்தனர். இதில் சூப்பர் சிங்கர் வழியாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஆஜீத் தன்னுடைய வாழ்க்கை கதையை பகிர்ந்து கொண்டார்.
 

சின்ன வயதிலேயே சூப்பர் சிங்கர் வழியாக புகழ் பெற்றது, பிறகு என்ன செய்வது என தெரியாமல் தவித்தது, அம்மாவுடன் சென்னைக்கு அடைக்கலம் தேடி வந்தது ஆகியவை குறித்து இயல்பாக அவர் எடுத்துரைத்தார். அதிலும் நீங்க 25 வயசுல பாத்தவங்க பலபேரை நான் என் 10 வயசுலேயே பார்த்துட்டேன் என அவர் பேசியது எல்லாம் வேற லெவல் மெச்சூரிட்டி.

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள ஆஜீத்க்கு வாய்ப்பு கிடைத்ததை அறிந்த பலர் இவன் எல்லாம் பிக்பாஸ் கண்டெஸ்டன்டா என காதுபட கிண்டல் செய்ததையும் பகிர்ந்து கொண்டார். பேசுனவங்க எல்லாம் அதே இடத்துல தான் இருகாங்க. நான் இங்க இருக்கேன் என அவர் கூறியதை பார்த்து அமைதியாக இருக்கும் ஆஜீத்துக்கு உள்ளே இவ்வளவு வலியா? என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News