Categories: Cinema News latest news

அஜித்தோட டின்னர் சாப்பிடுறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்!.. பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட செம பிக்ஸ்!

அஜர்பைஜானில் விரைவில் விடாமுயற்சி படத்தில் படப்பிடிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டே வருகிறது.

நேற்று அஜித்தின் மனைவி ஷாலினி ஸ்லிம் லுக்கில் டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு அஜித் நிற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: இதனாலதான் கேப்டன் ‘தூ’ன்னு துப்பினார்.. விஜயகாந்த் வீட்டிற்கு வரும் அஜித்!. இவரே சொல்லிட்டாரு..

ஏற்கனவே நடிகர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பிக்பாஸ் பிரபலமான ஆரவ் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: பீரோல துணி மாட்டிருக்கு!.. மோசமான கமெண்ட்ஸ்.. யாஷிகாவை பங்கம் பண்ணிய ஃபேன்ஸ்!..

வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி அல்லது மே 1-ஆம் தேதி என இரு தேதிக்குள் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஆன்லைன் புரோமோஷன் வேலைகளை படக்குழுவினர் ஆரம்பித்திருப்பதாக விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

நடிகர் அஜித்துடன் டின்னர் சாப்பிட போகிறேன் என பிக் பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னரான ஆரவ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கோட் சூட் அணிந்து கொண்டு பில்லா அஜித் போல செம மாஸாக நடிகர் அஜித்திற்கும் புகைப்படங்கள் ரசிகர்களை சந்தோசப்படுத்தி உள்ளன.

Saranya M
Published by
Saranya M