×

லேடி சூப்பர் ஸ்டாருக்குகே அட்வைஸா? அடங்கவே மாட்டாரா ஆரி...

நான்காவது சீசன் பிக் பாஸில் அட்வைஸால் பலரையும் கடுப்புல் ஆழ்த்தி இருக்கும் ஆரி, லேடி சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
 

பிக்பாஸின் நான்காவது சீசனின் வெற்றியாளர்கள் வரிசையில் நிற்கும் ஆரி, தனது செயல்களால் ரசிகர்களிடம் பேராதரவைப் பெற்றிருக்கிறார். இந்த சீசனின்
வெற்றியாளராக அவர் வருவார் என்று ஆரி ஆர்மியினர் முஷ்டி முறுக்கி வருகிறார்கள். 

மற்றொருபுறம் `அட்வைஸ் ஆரி’என்றும் அவரை ஒருதரப்பினர் விமர்சித்து வருகிறார்கள். இந்தநிலையில், பிக்பாஸின் கடந்த சீசனில் கலந்துகொண்டவரும், ஆரியுடன் அலேகா படத்தில் நடித்தவருமான ஐஸ்வர்யா தத்தா, ஆரி குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். 

இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா தத்தா, ``ஆரி நல்ல மனதுகொண்ட நபர். பிக்பாஸ் ஹவுஸில் அவரை யாரும் புரிந்துகொள்ளவில்லை. பிக்பாஸ் போட்டியாளர்களின் பெற்றோர்கள் கூட ஆரியைப் புரிந்துகொண்டார்கள். ஆனால், சக போட்டியாளர்கள் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. ஆரி, சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த இயக்குநரும்கூட. அவருடன் நடிக்கும்போது அவர் சொல்லும் டிப்ஸ்கள் நமக்கு நிச்சயம் நல்லதாகவே இருக்கும். அதேபோல், இயக்குநர்களுக்கும் அவர் கொடுக்கும் ஐடியா பலன் கொடுக்கும். `மாயா’ படத்தில் நடித்தப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன் மேடத்துக்கும் ஆரி சில டிப்ஸ்கள் கொடுத்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு நடக்கவும்  செய்திருக்கிறார் நயன்தாரா. அந்த அளவுக்கு மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என நினைப்பவர் ஆரி’’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News