Categories: Cinema News latest news

சிவகார்த்திகேயன் இல்லன்னா என்ன!.. இப்போ பிளாக் பாண்டி யாரு படத்துல நடிக்கிறாருன்னு பாருங்க!..

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிளாக் பாண்டி. அதன் பின்னர் நாகேஸ்வரி, வெல்டன், சிங்காரச் சென்னை மற்றும் கில்லி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ஆட்டோகிராப் படத்தில் பள்ளிப்பருவ மாணவராக நடித்து பிரபலமானார்.

மெட்டிஒலி, கோலங்கள் என மெகா ஹிட் அடித்த சீரியல்களில் சிறுவயதிலேயே நடித்துள்ள பிளாக் பாண்டி. ஆட்டோகிராப் படத்திற்கு பிறகு லீ, முருகா, தீக்குச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தவருக்கு வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு திரைப்படம் மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. படத்தில் நடித்த அஞ்சலி மட்டுமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். நாயகன் மகேஷ் மற்றும் பிளாக் பாண்டி உள்ளிட்டோர் அதிகமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இதையும் படிங்க: நல்லா பளபளன்னு பால் கொழுக்கட்ட மாதிரி இருக்காரே!.. டாப் ஆங்கிளில் அழகை காட்டும் சுரபி!…

கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த பிளாக் பாண்டி விஜய் டிவி பிரபலங்களுடன் மிக நெருங்கிய நட்பை பாராட்டி வந்தார். சிவகார்த்திகேயன் உடன் அப்படித்தான் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் சிவகார்த்திகேயனை சென்று சந்தித்துள்ளார். ஆனால் பட வாய்ப்பு ஏதும் தராமல், 20000 பணம் கொடுத்தார் என்றும் அது வேண்டாம் என திருப்பிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டதாகவும் சமீபத்திய பேட்டியில் பிளாக் பாண்டி கூறியிருந்தார்.

இந்நிலையில், விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் டைட்டில் வின்னர் ஆக மக்களின் அன்பை பெற்ற ஆரி அர்ஜுனன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் பிளாக் பாண்டி கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் ராஜசேகர பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த படத்தில் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க: உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும்!.. கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னும் இருங்க!.. விஜய் அட்வைஸ்!..

பிளாக் பாண்டிக்கும் மாலை போட்டு அழகு பார்த்த படக்குழுவினரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சேரன் இயக்கத்தில் சமீபத்தில் ஜர்னி வெப்சீரிஸில் ஆரி அர்ஜுனன் நடித்திருந்தார். அதன் வெற்றிக்குப் பிறகு தற்போது இந்த படம் கிடைத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.

Saranya M
Published by
Saranya M