விஜே அர்ச்சனாவுக்கு சப்போர்ட் செய்து ஆரி அர்ஜுனன் போட்ட ட்வீட்டை டெலிட் செய்து விட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிரதீப் ஆண்டனி வெளியேறியதும் அவருக்கு ஆதரவாக விசித்ரா மற்றும் விஜே அர்ச்சனா தான் குரல் கொடுத்து பேசினர்.
விஜே அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த நிலையில், விசித்ரா, மாயா இருவரும் டைட்டிலை நோக்கி நகர வேண்டும் என்பதற்காக அர்ச்சனாவை விசித்ரா கழட்டி விட்டு இந்த கேங்கில் வந்து ஐக்கியம் ஆகி விட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: படம் ஓடுமான்னு சந்தேகப்பட்ட பிரபு!.. சொல்லி அடித்த ரஜினி!. அட அந்த படமா?!..
பிரதீப் ஆண்டனிக்கு வெளியே இருந்த ஆதரவை அறிந்து கொண்டு உள்ளே வந்த நிலையில் தான் அர்ச்சனா அவருக்கு சப்போர்ட் செய்து அவரது ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் என்றும் அதே போலத்தான் தற்போது வினுஷாவை பயன்படுத்தி நிக்சனை வெளியே அனுப்ப அர்ச்சனா செம ஸ்கெட்ச் போட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்.
கமல்ஹாசன் இந்த வாரம் மாயா, பூர்ணிமாவை வழக்கம் போல கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டு நிக்சனையும் அர்ச்சனாவையும் வச்சு செய்ய காரணமே அதுதான் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: எஸ்கேவுக்கு செம டஃப் கொடுப்பார் போல தெரியுதே!.. செல்லம்மாவுடன் சுத்துனதே ஹீரோயினாக்கத்தானா கவின்?
விஜே அர்ச்சனாவுக்கு ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்த ஆரி அர்ஜுனன் தற்போது அந்த ட்வீட்டையே டெலிட் செய்து விட்ட நிலையில், அர்ச்சனாவுக்கு எதிராக சதி நடப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் அர்ச்சனா பற்றி தெரியாமல் ஆரி ஆதரவு கொடுத்தார் என்றும் அர்ச்சனாவின் முகத்திரை கிழிந்து விட்ட நிலையில், தனது ஆதரவை அவர் வாபஸ் வாங்கியிருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…