தென்னிந்திய சினிமாவில் தற்போது கொடிகட்டி பறக்கும் அளவிற்கு டாப் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதி வலம் வர அடித்தளம் போட்ட படம் என்றால் அது சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் தான். இந்த படம் தான் விஜய் சேதுபதிக்கு ஒரு அடையாளத்தை பெற்று தந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஆரி என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உதயநிதி நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆரி பேட்டி ஒன்றில் இந்த தகவலை கூறியுள்ளார்.
அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “இயக்குனர் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிப்பது குறித்து பேச காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் என்னை வர சொல்லி இருந்தார். சரியாக நான் அவரை பார்க்க கிளம்பிய சமயத்தில் என் வீட்டில் உறவினர்கள் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார்கள்.
அப்போது அம்மாவும் வீட்டில் இல்லாததால், என்னால் அவர் சொன்ன நேரத்திற்கு செல்ல முடியவில்லை. உடனே நான் போன் செய்து என் நிலமையை கூறினேன். ஆனால் அவர் என்னிடம் கோபித்து கொண்டார். பின்னர் நான் வேலையை முடித்து விட்டு கூப்பிடுகிறேன் என்று கூறி போனை கட் செய்து விட்டார்.
அன்று நான் செய்த ஒரு சிறிய தவறால் ஒரு அருமையான பட வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். ஆனால் பரவாயில்லை அந்த படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு அற்புதமான நடிகரை இயக்குனர் சீனுசாமி தந்திருக்கிறார்” என ஆரி கூறியுள்ளார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…