×

அத்தானை மயக்க ஆசையாய் பால் கொழுக்கட்டை செய்து கொடுத்த நடிகரின் மனைவி!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன். பிக்பாஸ் வீட்டில் நேர்மையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
 

ஆரி நேற்று தனது திருமண நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவில் தனது மனைவிக்கு வாழ்த்து கூறினார்.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் என்னை மணப்பதற்காக உன் தாய் தந்தையை பிரிந்தாய் உன் குடும்பத்தை பிரிந்தாய். உன் தாய் நாட்டை பிரிந்தாய்.. என்ன கொடுப்பேன் உனக்கு.. என் அன்பை இறுதிவரை கொடுத்துக் கொண்டே இருபேன் உனக்கு என உருக்காமாக பேசி தனது மனைவிக்கு வாழ்த்து கூறினார். 

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள டிவியில் ஆரியின் மனைவி தனது குழந்தையோடு வந்து வாழ்த்து சொல்லும் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய அவரது மனைவி நதியா, திருமண நாள் வாழ்த்துகள் அத்தான்.. நாம ரெண்டு பேரும் 2வது முறை கல்யாண நாளில் பிரிந்திருப்பது.

உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். பால் கொழுக்கட்டை செய்து கொடுத்திருக்கேன். நீங்களும் சாப்பிடுங்க.. எல்லாருக்கும் கொடுங்க.. ஃபேமிலில எல்லாரும் பிக்பாஸ் பாக்குறாங்க.. பிரண்ட்ஸ் பாக்குறாங்க.. நல்லா விளையாடுறீங்க.. ஐ லவ் யூ.. ஐ மிஸ் யூ.. லாட்ஸ் ஆஃப் கிஸஸ் டூ யூ.. என்று கூறினார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News