தேவையில்லாம என்னை சீண்ட வேண்டாம்!.. பெண் சிங்கமாக கர்ஜிப்பேன்!.. எச்சரித்த ஆர்த்தி ரவி!..

 
தேவையில்லாம என்னை சீண்ட வேண்டாம்!.. பெண் சிங்கமாக கர்ஜிப்பேன்!.. எச்சரித்த ஆர்த்தி ரவி!..

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி ரவி இடையேயான பிரிவு. அதற்கு காரணமாக கருதப்படும் பாடகி கெனிஷாவும் தற்போது ரவி மோகனை விட்டு பிறியப்போவதாக அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பின்னணி பாடகி கெனிஷாவுடன் ரவி நெருக்கமாக பழகி வந்ததாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் நண்பர்கள் மட்டுமே என கூறப்பட்டாலும், பின்னர் அவர்கள் ஒன்றாக பல இடங்களுக்கு சென்றதால் பல்வேறு வதந்திகள் பரவின.

இந்நிலையில் கெனிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த துயர அனுபவங்களை பகிர்ந்த அவர், “ஒரு மனிதரை காப்பாற்றுவதற்காக நான் என்னையே தியாகம் செய்தேன். ஆனால் தொடர்ந்து இணையத்தில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இனிமேல் எந்த விளக்கமும் அளிக்கப் போவதில்லை” என உருக்கமாக பேசியிருந்தார்.

மேலும், “அவரை முழுமையான விடுதலையுடன் அனுப்பிவைக்கிறேன். இனி அவருக்காக போராடப்போவதில்லை. சில காலம் சமூக வலைதளங்களிலிருந்தும், இசை மற்றும் தெரபி பணிகளிலிருந்தும் விலகுகிறேன்” என தெரிவித்திருந்தார். இதையடுத்து ரவி மோகனும், கெனிஷாவும் பிரிந்துவிட்டார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கருத்து தற்போது அதிக கவனத்தை பெற்றுள்ளது. அதில், “தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பக்கூடாது. குறிப்பாக அது ஒரு தாய் சிங்கமாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என் அமைதியை பலவீனமாக நினைக்க வேண்டாம். என் குழந்தைகளையும், என் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டிய சூழல் வந்தால் உண்மையுடன் எதிர்கொள்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆர்த்தி தனது பதிவில் யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை. இருப்பினும் கெனிஷாவின் சமீபத்திய வீடியோவுக்கு பதிலடியாகவே இந்த பதிவு இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆர்த்தியின் பதிவை தொடர்ந்து ரவி மோகன் தற்போது மீடியாக்களை அழைத்து பிரஸ் மீட் கொடுத்து தான் பாதிக்கப்பட்டதாக அழுது புலம்பி வருகிறார். இருவருக்கும் இடையே என்ன பஞ்சாயத்து வெடித்தது ரவி மோகன் சினிமாவை விட்டு விலக முடிவெடுக்க யார் காரணம் என திரைத்துறையே பரபரப்பில் உள்ளது.

From Around the web