ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் காப்பியா?.. அட்லி லெவல் போய்ட்டாரு செல்வராகவன்.....

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் வருடம் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர் மற்றும் பாண்டிய வம்சங்களுக்கு இடையே நடக்கும் போர் தொடர்பான கதையை கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, இப்படத்தின் 2ம் பாகத்தை எப்போது இயக்குவீர்கள் என செல்வராகவனிடம் தனுஷ் ரசிகர்கள் பலரும் நச்சரித்து வந்தனர்.
இந்நிலையில், செல்வராகவன் இயக்க அவரின் சகோதரர் மற்றும் நடிகர் தனுஷ் நடிக்க ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகவுள்ளது. இந்த அறிவிப்பை செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் செல்வராகவன் பகிர்ந்துள்ள போஸ்டர் எங்கிருந்து சுட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாவலின் முகப்பு பக்கத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து ‘என்ன தல இது?’ என கிண்டலடித்து வருகின்றனர். சிலர் ‘பெட்டரா டிசைன் பண்ணிருக்கலாம் அட்லி லெவல் போய்ட்டாப்ல’ என பதிவிட்டு வருகின்றனர்.
மாம்ஸ் ஏன் இப்படி 😒😒😒😒 pic.twitter.com/XZyKzZ213R
— 𝓜𝓡.நாயர் ッ (@Nair_officl) January 1, 2021