×

கைவிட்ட சினிமா… புதிய தொழில் ஆரம்பித்திருக்கும் ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளதால் அவர் புதிதாக பலூன்களைக் கொண்டு அலங்காரம் செய்யும் புதிய தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
 

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளதால் அவர் புதிதாக பலூன்களைக் கொண்டு அலங்காரம் செய்யும் புதிய தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பு என வர்ணிக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானி ஒரு கட்டத்தில் தனக்கான வாய்ப்புகளை இழக்க ஆரம்பித்தார். அதற்கு மிக முக்கியக் காரணமாக சொல்லப்படுவது தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டாமல் வெறும் அழகு பதுமையாகவே எல்லா படத்திலும் வந்து கதாநாயகனோடு ஆடி பாடி சென்றதே.

இப்போது அவரது கைவசம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹா மட்டுமே உள்ளது. இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வங்தார். 'மகா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் இப்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களில் நடக்கும் விழாக்களுக்கு பலூன்கள் மூலம் அலங்காரம் செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News