×

வயசானாலும் ஸ்டெயிலும் அழகும் அப்படியே இருக்கு அபிமா!!!

மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார்.
 
வயசானாலும் ஸ்டெயிலும் அழகும் அப்படியே இருக்கு அபிமா!!!

மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அழகான புகைப்படத்த பதிவிட்டு வயசானாலும் ஸ்டெயிலும் அழகும் அப்படியே இருக்கு என ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News