×

பிக்பாஸில் பங்கேற்பது குறித்து மனம் திறந்த நாசர் மகன்!

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து அபிஹாசன் பேட்டி

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது.

கடந்த இரு தினங்களாக தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நாசர் மகன் அபிஹாசன் கமலின் சிபாரிசின் படி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் பரவி வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்ப்போது இது குறித்து பதிவிட்ட நடிகர் அபிஹாசன்,  " பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவில்லை" என்று கூறி பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News