அப்பாவானார் அபிஷன் ஜீவிந்த்!.. டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு ‘வித் லவ்’ உடன் மகள் பிறந்தார்!..
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குழந்தையுடன் புகைப்படத்தை பகிர்ந்த அபிஷன் ஜீவந்த் அதனுடன் ‘Officially a Girl Dad’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தனது காதலியான அகிலாவை அபிஷன் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில்தான் இருவரும் தங்களது முதல் திருமண நாளைக் கொண்டாடி புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், தற்போது பெற்றோர்களாகியிருப்பது அவர்களது மகிழ்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு வித் லவ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி வெற்றிப் பெற்ற அபிஷன், தற்போது சிவராஜ்குமார் நடிக்கும் ‘பிக்காசோ’ படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், அடுத்ததாக மீண்டும் இயக்குநராக ஒரு திரைப்படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அபிஷன் பகிர்ந்துள்ள இந்த மகிழ்ச்சியான செய்தி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
