அபிஷன் ஜீவிந்துக்கு 2 ஹீரோயின்!.. கன்னட சூப்பர் ஸ்டார் இப்படியொரு ரோலில் நடிக்கிறாரா?.. ஜாக்பாட்!..
'டூரிஸ்ட் ஃபமிலி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அபிஷன் ஜீவிந்த், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவரும் நிலையில் அவரது அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.
அபிஷன் ஜிவிந்த் இயக்கத்தில் வெளியான 'டூரிஸ்ட் ஃபமிலி' ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்த நிலையில், சமீபத்தில் வெளியான 'வித் லவ்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி நடிகராகவும் தனது திறமையை நிரூபித்து பாராட்டுகளை பெற்றார். இளம் ரசிகர்களை கவர்ந்த அந்த படம் அவருக்கு நடிகராகவும் தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

அடுத்ததாக, இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் சிறப்பம்சமாக கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவராஜ்குமார் தந்தை வேடத்தில் இணைந்துள்ளார். இப்படம் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் பற்றிய கதையாகும்.மேலும், நடிகைகள் ஷிவானி நாகாரம் மற்றும் யோகலட்சுமி ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் யோக லட்சுமி நடித்த நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக இணைந்துள்ளார்.
அபிஷன் ஜீவிந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய படத்தின் பூஜை விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தற்போது அந்த பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இயக்குநராக வெற்றி பெற்ற அபிஷன் ஜீவிந்த், நடிகராகவும் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், சிவராஜ்குமார் போன்ற அனுபவம் மிக்க நட்சத்திரத்துடன் இணையும் இந்த புதிய படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
