அபிஷன் ஜீவிந்தின் பிக்காசோ படத்தின் அட்டகாசமான அப்டேட் இதோ!..

 
abishan

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குநராக பிரபலமான அபிஷன் ஜீவிந்த், அதை தொடர்ந்து வித் லவ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது சிவராஜ்குமார் உடன் இணைந்து நடிக்கும் பிக்காசோ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் ட்ராப் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என போஸ்டருடன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கவுதம் சிவராமன் இயக்கும் இப்படத்தில் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்தின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், யோகலட்சுமி, ஷிவானி நாகரம், கானா வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இயக்குநராக வெற்றி பெற்ற அபிஷன், நடிகராகவும் தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். சிவராஜ்குமார் அபிஷன் ஜீவிந்த் கூட்டணி ரசிகர்களிடம்  படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

CR  Desk
CR Desk

7957 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web