அபிஷன் ஜீவிந்தின் ஹக்கூனா மட்டாட்டா பாடல் ரிலீஸ்!..
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடித்துள்ள பிக்காசோ படத்தின் முதல் பாடலான ஹக்கூனா மட்டாட்டா தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிராமா கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கவுதம் சிவராமன் இயக்கியுள்ள இப்படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்தார்.
இப்படத்தில் ஷிவானி நாகரம், யோகலட்சுமி, பாடகர் கானா வினோத் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முதல் பாடலான ஹக்கூனா மட்டாட்டா வெளியாகியுள்ள நிலையில், ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘பிக்காசோ’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
