×

நீங்க எப்போதும் வெட்டியா தானே இருக்கீங்க... அபிஷேக்கை சீண்டிய நெட்டீசன்கள்!

கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன, தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. மீண்டும் படப்பிடிப்பை துவங்க மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது.
 

தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் செய்தி அறிந்த பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மகிழ்ச்சி அடைந்தார். இந்த வாரத்தின் சிறந்த செய்தி இது தான் என்று அபிஷேக் பச்சன் ட்வீட் செய்தார். 

அந்த ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசி ஒருவரோ, ஆனால் உங்களுக்கு தொடர்ந்து வேலையில்லாமல் தானே இருக்கப் போகிறது நீங்கள் எப்போதும் வெட்டி தானே, என்று கிண்டலாக கமெண்ட் போட்டார்.

அந்த கமெண்ட்டை பார்த்த அபிஷேக் பச்சன் கூறியிருப்பதாவது, அது ரசிகர்களாகிய உங்கள் கைகளில் இருக்கிறது. உங்களுக்கு எங்கள் நடிப்பு பிடிக்கவில்லை என்றால் புதுப்பட வாய்ப்பு கிடைக்காது. அதனால் நாங்கள் எங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்துகிறோம். நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News