SJ சூர்யாவின் படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்து - ஒருவர் மரணம்!

 
sj surya

படப்பிடிப்பில் விபத்து: 

எஸ் ஜே சூர்யா இயக்கி ஹீரோவாக நடித்த வரும் கில்லர் திரைப்படத்தில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்திருக்கிறது. ஆம் அந்த படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதில் ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார். இது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது .

கில்லர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று நாட்களாக சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில்லில் நடைபெற்று வந்தது . இந்த நிலையில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் படப்பிடிப்பு தளத்தில் சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது .

 ஒருவர் பலி: 

எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் கிட்டத்தட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மேலும் அதில் மதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். மீதமுள்ள மூன்று பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

Tags

From Around the web