×

5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!

144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. 44 தடை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்ட பிறகும் பொதுமக்களில் பலர் அதன் சட்ட விதிமுறைகளை சரிவர கடைப்பிடிக்காமலும், தனிமனித இடைவெளியை தவிர்த்தும், உத்தரவுகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். 

 

இத்தடை உத்தரவுப்படி ஐந்து நபர்களுக்கு மேல் எந்த இடத்திலும், எக்காரணத்திற்காகவும் கூடுவது சட்டவிரோதமானது. இச்சட்டம் அனைத்து சமூக, சமய, மதம் சார்ந்த விழாக்கள், வழிபாடுகள், கூட்டங்களுக்கும் முழுமையாக பொருந்தும்.

பொதுமக்கள் 144 தடை உத்தரவு நடைமுறைகளை எக்காரணம் கொண்டும் மீறாமல் கடைப்பிடிக்க வேண்டுமென தமிழக காவல்துறை மீண்டும் வலியுறுத்துகிறது. இனி 144 தடை உத்தரவை மீறி ஐந்து நபர்களுக்கு மேல் எந்த இடத்திலும் எவ்வித காரணங்களுக்காகவும் கூடினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக்கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஆகவே, பொதுமக்கள் சட்டவிதிகளை மீறுவதை தவிர்த்து இக்கொடிய தொற்று நோயை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு தமிழக காவல்துறையினருடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News