நெட்பிளிக்ஸ் ரசிகர்களே ரெடியா!.. இந்த வாரம் ‘பிளாஸ்ட்’ ஓடிடியில் ஓடி வருது!..

 
blast

ஆக்ஷன் மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த வெற்றிப்படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற "பிளாஸ்ட்" திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதோடு தற்போது ஓடிடி ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது.

இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா, அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, கேஜிஎஃப் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 

கடந்த மே 28, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான "பிளாஸ்ட்", மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்த ஒரு நடுத்தர குடும்பம் சக்திவாய்ந்த குற்றவியல் கும்பலை எதிர்கொள்ளும் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குடும்ப பாசம், அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் சமூகப் பின்னணியுடன் அமைந்த கதைக்களம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 மேலும், பிளாஸ்ட் திரைப்படம் வரும் ஜூன் 25 முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் படம் வெளியாக இருப்பதால், இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திரையரங்குகளில் பார்க்க தவறவிட்ட ரசிகர்களுக்கு, வரும் ஜூன் 25 முதல் "பிளாஸ்ட்" ஒரு புதிய ஓடிடி அனுபவமாக அமைய உள்ளது.

Tags

From Around the web