2வது மகளுக்கும் காதல் திருமணம்!. போட்டோஸை பகிர்ந்த ஆக்சன் கிங் அர்ஜூன்!...

 
arjun

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஆக்சன் கிங்காக வலம் வருபவர் அர்ஜுன். பல தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி காதலித்தார்.

anjana

அந்த காதலை ஏற்றுகொண்ட அர்ஜூன் கடந்த 2024ம் வருடம் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். அடுத்து அர்ஜுனின் இளைய மகளான அஞ்சனா வெளிநாட்டை சேர்ந்த இசயா நட்டர் என்பவரை காதலித்து வந்தார்.

anjana

இந்நிலையில் அவர்களின் திருமணம் இத்தாலியில் உள்ள Tuscany என்கிற இடத்தில் கடந்த 18ம் தேதி நடைபெற்று முடிந்திருக்கிறது. அந்த திருமண நிகழ்வில் நெருங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்..

anjana

இது தொடர்பான புகைப்படங்களை அர்ஜூன் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தனது மகள் மற்றும் மருமகனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

anjana

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, திரைப்பிரலங்களும் ரசிகர்களும் அர்ஜுனின் மகள் அஞ்சனாவுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

anjana

Tags

From Around the web