ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் பிளாஸ்ட் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. மே மாசம் மெகா வேட்டையா இருக்குமா?..

 
ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் பிளாஸ்ட் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. மே மாசம் மெகா வேட்டையா இருக்குமா?..

நடிகர் அர்ஜூன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ப்ளாஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தை இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் இயக்கியுள்ளார். படத்தில் அர்ஜூனுடன் நடிகைகள் அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் சமீபத்தில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது.

மேலும், படத்திற்கு இசையமைப்பாளராக ரவி பஸ்ருர் பணியாற்றியுள்ளார். அதிரடி மற்றும் திரில்லர் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

விஜய் முதலமைச்சராக ஆன நிலையில் கூட ரசிகர்கள் அர்ஜுன் படமான முதல்வன் காட்சிகளை வைத்து தான் எடிட்களை இறக்கி வருகின்றனர். லியோ, விடாமுயற்சி என விஜய், அஜித்துக்கு வில்லனாக மிரட்டிய அர்ஜுன் நீண்ட நாள் கழித்து ஹீரோவாக பிளாஸ்ட் பண்ண காத்திருக்கிறார்.

அர்ஜூன் நடித்துள்ள ப்ளாஸ்ட் திரைப்படம் வரும் மே 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் இந்த மாதம் இறுதியில் கூட வெளியாகாது என்பதால் தான் அர்ச்சனா கல்பாத்தி பிளாஸ்ட்டை பக்காவாக இறக்குகிறார் என்கின்றனர்.

From Around the web