90s கிட்ஸ்-களின் சாக்லேட் பாய்.. நியூசிலாந்தில் அரசு வேலையில் செட்டில் ஆன அப்பாஸ்

 
90s கிட்ஸ்-களின் சாக்லேட் பாய்.. நியூசிலாந்தில் அரசு வேலையில் செட்டில் ஆன அப்பாஸ்

1996ல் கதிர் இயக்கத்தில் வெளிவந்த காதல் தேசம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் அப்பாஸ். அந்த படம் மற்றும் பாடல்களும் மிக பிரபலம். அந்த படத்திற்கு பின் அப்பாஸ் அப்போஒதைய பெண்களின் கனவு நாயகனாக மாறினார். தொடர்ந்து விஐபி, பூச்சூடவா, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம், மின்னலே என பல படங்கள் நடித்து வந்தார்.

அப்பாஸின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, சில தவறான முடிவுகளால் பல வெற்றிப் படங்களை அவர் தவறவிட்டார். குறிப்பாக, ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் முதலில் அப்பாஸுக்குத் தான் வந்தது. கால்ஷீட் பிரச்சனையால் அவர் அதைத் தவறவிட்டார். அதேபோல, தளபதி விஜய் நடிப்பில் மெகா ஹிட்டான காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் அப்பாஸ் தவறவிட்டார். இந்த இரண்டு படங்களிலும் அவர் நடித்திருந்தால், அவரது சினிமா கேரியர் அசைக்க முடியாத நிலைக்கு சென்றிருக்கும் என்று பலரும் கூறுவதுண்டு.

தொடர்ந்து அவர் நடித்த படஙகள் தோல்வியை தழுவவே, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் தனது குடும்பத்துடன் நியூசிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்து செட்டிலாகிவிட்டார்.

90s கிட்ஸ்-களின் சாக்லேட் பாய்.. நியூசிலாந்தில் அரசு வேலையில் செட்டில் ஆன அப்பாஸ்

இந்நிலையில் தான் கடந்து வந்த பாதை குறித்து அப்பாஸ் சமீபத்தில் மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், நான் என்ன வேலை செய்தாலும் அது என் மனசுக்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பவன். நியூசிலாந்து வந்த புதிதில் ஒரு பெட்ரோல் பங்கில் கூட பத்து நாட்கள் வேலை பார்த்தேன். ஆனால், அந்த வேலை எனக்குத் திருப்தி அளிக்காததால், அதை விட்டுவிட்டேன்.

தற்போது இங்கு ஒரு அரசுப் பணியில் சேர்ந்து, மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது, ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் மட்டுமே சினிமா மற்றும் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்த ஹேப்பி ராஜ் படத்தில் அப்பாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web