×

குசும்புக்கார அப்பாவிடம் குறும்பு பண்ணும் நடிகர் ஆதி - வீடியோ!

நடிகர் ஆதி தன் தந்தைக்கு ஷேவிங் செய்து காசு வாங்கும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் ஷேவிங் செய்துவிட்டு அப்பாவிடம் இருந்து பணம் கேட்கிறார். அப்பாவோ  குறைவான பணத்தை கொடுப்பதால் பேரம் பேசிக்கொண்டே பர்ஸை வாங்கி பணத்தை எடுத்துக்கொள்கிறார்.

 

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. தொடர்ந்து ஈரம், அரவான், ஆடுபுலி, அய்யனார் , மரகத நாணயம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாக்களிலும் கவனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வரும் நடிகர் ஆதி தற்போது தனது தந்தைக்கு ஷேவிங் செய்துள்ள இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ஆதி Let's the Bridge என்ற அமைப்பின் மூலம் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா  நிவாரண உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News