வேகமாக ஓடி வந்த அஜித்.. ஷாலினி டிரஸ சரி செஞ்சு! கண்கொள்ளா காட்சியா இருக்கே
அஜித்:
நேற்று ஐதராபாத்தில் இந்திய பேட் மிண்டன் வீராங்கனை பிவி சிந்து திருமண வரவேற்பு நடைபெற்றது. அந்த வரவேற்பிற்கு திரையுலகை சார்ந்தவர்களும் பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஒரு ஒலிம்பிக் வீராங்கனை. அவரது திருமண வரவேற்பு எனும் போது அனைவரும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர். இதில் அஜித்தும் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாத அஜித் நேற்று திடீரென இந்த திருமண வரவேற்பில் கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் விமர்சனத்திற்கு ஆளானாலும் எங்கு போக வேண்டும்? யாரை சந்திக்க வேண்டும் என முடிவு செய்வது அவரவர் உரிமை. சில பேர் இன்னும் விஜயகாந்த் மறைவிற்கு பிரேமலதாவுக்கு ஆறுதல் சொல்லவே இல்லை. இங்கு மட்டும் போக தெரியுதா என்றெல்லாம் கமெண்டில் கூறி வருகிறார்கள்.
கொண்டாடும் ரசிகர்கள்:
எப்படி இருந்தாலும் அவரின் ஒரு புகைப்படம் வந்தாலே அதை நாள்முழுக்க ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த விழாவில் அஜித் கலந்து கொண்ட வீடியோ வெளியானதும் ஏதோ லைஃப் டைம் செட்டில்மெண்ட் போல கொண்டாடி வருகிறார்கள் .அச்சு அசல் ஒரு வெளி நாட்டுக் காரர் போலவே அஜித் இந்த வீடியோவில் காணப்படுகிறார். இதில் அவருடைய குடும்பத்தை அஜித் ஹேண்டில் பண்ணும் விதம் தான் அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுவரை தன் குடும்பத்தை எப்படி பார்த்து வருகிறார்? அவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அஜித் ரசிகர்களுக்கு ஆர்வமாக இருந்தது. அது இந்த வீடியோவில் தெள்ளத் தெளிவாக பதிவாகியிருக்கிறது. திருமண வரவேற்பு முடிந்து திரும்பும் போது தனது கார் அருகே வந்ததும் அங்கு பவுன்சர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அஜித் ஓடி வந்து தன் மகளை காருக்குள் அனுப்புகிறார்.
ஷாலினி உடைகளை சரிசெய்யும் அஜித்:
இன்னொரு பக்கம் ஷாலினியையும் அவரே ஏற்றிவிட்டு ஷாலினியின் உடைகளை எல்லாம் சரி செய்துவிட்டு உட்கார வைத்து அதன் பிறகு அஜித் காருக்குள் உட்காருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் மனைவியை அவர் எப்படி டிரீட் செய்கிறார்? கிரேட் ஜெண்டில்மேன் என கூறி வருகிறார்கள்.