இவ்வளவு எளிமையா தல அஜித்? - வைரலாகும் ஆட்டோ வீடியோ
Fri, 19 Mar 2021

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். எளிமை விரும்பியான இவர் பொது இடங்களில் நடிகர் என்கிற பந்தா இல்லாமல் நடந்து கொள்வார். எல்லோருடனும் சகஜமாக பேசுவார். ஓரமாக ஒரு இடத்தில் நின்று வேடிக்கை பார்ப்பார். எனவே, இவர் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் எப்போதும் வைரலாக வலம் வரும். தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் எளிமையாக ஆட்டோவில் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கமிஷனர் அலுவலகத்தில் அவர் தவறுதலாக நுழைந்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
#Valimai The man of Simplicity #AjithKumar ♥️ pic.twitter.com/eUUbCrWwON
— Mr.Prem (@MrPrem34861646) March 18, 2021