Categories: Cinema News latest news

கேஜிஎஃபில் அஜித் நடிக்கிறது பெருமையா? இத விட அவமானம் வேறெதுவும் இல்ல..என்ன இப்படி சொல்லிட்டாரு?

சமீபகாலமாக அஜித்தை பெருமை படுத்த வேண்டும் என பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அது உண்மையிலேயே பெருமை இல்லை. அவரை அவமானப்படுத்துவதற்கே சமம் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். கோலிவுட்டில் இன்று ஒரு மாஸ் ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித்.

தான் உண்டு. தன் வேலை உண்டு என இருப்பதாலேயே அவரை சுற்றி பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது வயநாடு மக்களுக்கு உதவ அஜித் 35 கோடி கொடுத்தார் என்ற ஒரு செய்தி வைரலானது. ஆனால் அது உண்மையில்லை. இந்த செய்தி வைரலானதே அஜித்தை கிண்டல் செய்வதற்குத்தான். ஏனெனில் பொதுவாக இந்த மாதிரி செயல்களை அஜித் செய்ய மாட்டார்.

அவருக்கு தேவை என்றால் சம்பந்தவட்டருக்கு நேரடியாக போய் செய்யக் கூடியவர். இந்த மாதிரி வெள்ளம் , புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அந்தந்த அரசு இருக்கும் போது நாம் ஏன் செய்ய வேண்டும் என நினைப்பவர். ஏனெனில் நாம் கொடுக்கும் வரிப்பணம்தான் உதவியாக மறுபடியும் நம்மை வந்து சேர்கிறது. இதை மனதில் வைத்துதான் அஜித் செய்யமாட்டார்.

இந்த நிலையில் அவரை பற்றிய மற்றொரு டிரெண்டிங்கான செய்தி கே.ஜி.எஃபில் கேமியோ ரோலில் அஜித் நடிக்கிறார் என்று. அதுவும் உண்மையில்லை என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். மேலும் பிரசாந்த் நீலை பற்றியும் அவர் எடுத்த படங்களை பற்றியும் அஜித்திற்கு நன்றாகவே தெரியும். அவர் படங்களில் நடிக்க நல்ல உடல் உழைப்பை கொடுக்க வேண்டும். ஆனால் அஜித்தால் அது முடியாத காரியம்.

ஷங்கரும் சமீபத்தில் அஜித்தை நடிக்க வைக்க அழைத்த போது இந்த ஒரு காரணத்தை சொல்லித்தான் அஜித் மறுத்தாராம். அதுமட்டுமில்லாமல் கே.ஜி.எஃபில் நீங்கள்தான் ஹீரோ. யஷ் கேமியோ ரோல் என்றால் அஜித் வருவார். அவரை போய் கேமியோ ரோல் என்றால் நம்புற காரியமாவா இருக்கிறது?

சிங்கத்துக்கு வாலாக இருக்கவே மாட்டார் அஜித் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். மேலும் சினிமாவில் எப்பேற்பட்ட புகழைக் கொண்ட நடிகர். விஜய்க்கு இணையான அந்தஸ்தை பெற்ற நடிகர். கே.ஜி.எஃபில் அஜித் நடிக்கிறார் என்றால் பெருமை என அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அவருக்கு சிறுமைதான் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini