Connect with us
arjun

Cinema News

சர்ப்பரைஸ் மேல சர்ப்பரைஸ்!.. விடாமுயற்சி படத்தில் ரெண்டு அர்ஜூன்!. அட என்னப்பா சொல்றீங்க!…

Vidamuyarchi: துணிவு படத்திற்கு பின் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு படம் வெளியாகி 10 மாதங்கள் கழித்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இடையில் விக்னேஷ் சிவன் இயக்குனர் என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அவர் தூக்கப்பட்டு மகிழ் திருமேனி இயக்குனராக அறிவிக்கப்பட்டார்.

சில ஹாலிவுட் படங்களின் கதைகளை சுட்டு படமாக எடுக்க அஜித், மகிழ் திருமேனி என இருவருமே முயற்சி செய்ததாக சொல்லப்பட்டது. அதன்பின் மகிழ் திருமேனியே ஒரு கதையை உருவாக்கினார். அஜித்துக்கு அது பிடிக்கவில்லை. அதன்பின், வேறு ஒரு ஹாலிவுட் படத்தின் லைனை சொல்ல அஜித்தும் ஓகே சொன்னார். அதுதான் இப்போது படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: அது உங்க பிரச்சனை!.. என்னால முடியாது!. கறாரா சொன்ன அஜித்?!.. என்னவாகுமோ விடாமுயற்சி!…

அதாவது, வெளிநாட்டுக்கு மனைவி திரிஷாவுடன் செல்கிறார் அஜித். அப்போது ஒரு குரூப் திரிஷாவை கடத்தி சென்றுவிடுகிறது. அஜித் எப்படி மனைவியை மீட்கிறார் என்பதுதான் கதை என சொல்லப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக அர்ஜூன் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ஸ்டைலிசான லுக்கில் அர்ஜூன் இருக்கும் சில புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படம் ஹாலிவுட் பாணியில் ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அர்ஜூன் மட்டுமில்லாமல் அர்ஜுன் தாஸ், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சில நாட்கள் பிரேக் விட்ட நிலையில் தற்போது அஜித் இன்று மீண்டும் அசர் பைசானுக்கு கிளம்பிவிட்டார். இந்நிலையில், இப்படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜூன் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் ஒரு அர்ஜூன் இருக்கும்போது இயக்குனர் அர்ஜுன் என அழைத்தால் அஜித், அர்ஜூன் என இருவரும் வந்து நிற்பார்களா தெரியவில்லை.

இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? ஷாக் கொடுத்த நண்பர்

Continue Reading

More in Cinema News

To Top