தமிழ் சினிமாவில் பிரபலங்கள் மீதே பல பிரபலங்களுக்கு அலாவதியான பிரியம் இருப்பதை பார்த்திருக்கிறோம். அதிலும் மாஸ் நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர்களுக்கு நிறைய நடிகர், நடிகைகள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
முன்னனி ஹீரோக்கள் காட்டும் ஹீரோயிஷத்தை பார்த்து ரசித்து தங்களுக்குள்ளாகவே சில மனக்கோட்டைகளையும் கட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித்தை பார்த்து சின்ன வயதில் இருந்து ரசிகையான ஒரு நடிகை அஜித்திற்கு எழுதிய லெட்டர் பற்றி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏராளமான படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை சுஜாதா. கிராமத்து மண்வாசனையுடன் கூடிய அவரது பேச்சால் அனைவரையும் ஈர்த்தவர். மேலும் அனைத்து முன்னனி நடிகர்களுடன் அம்மா, அண்ணி, அக்கா என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர். குறிப்பாக ’பருத்திவீரன்’ படத்தில் கார்த்தியுடன் இவர் பேசும் வசனத்தால் அனைவரையும் ஈர்த்தவர்.
இவர் தான் அஜித்திற்கு லெட்டர் எழுதியுள்ளார். அவர் சின்ன வயதில் இருந்தே அஜித்திற்கு தீவிர ரசிகையாம். ஒரு சமயம் லெட்டர் கூட எழுதி போட்டேன். ஆனால் இன்னும் என் வீட்டுக்காரருக்கு கூட இந்த விஷயம் தெரியாது என வெட்கத்துடன் கூறினார். மேலும் நடிகை சுஜாதா அஜித்துடன் விஸ்வாசுவம் படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…