×

வலிமை படத்தில் தல பேர் இதுதானாம்! - டிரெண்டிங்கில் தெறிக்கவிட்ட ரசிகர்கள்

 

போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்க, நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்டது. ஆனால், 100 பேரைக் கொண்டு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளதை அடுத்து படிப்படியாக படப்பிடிப்பிற்கான வேலைகள் துவங்கியது.

இதைத்தொடர்ந்து ஹைதராபாத் ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அப்படத்தில் அஜித்தின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது. 

மங்காத்தா படத்தில் விநாயக் மகாதேவ் என்கிற பெயரிலும், என்னை அறிந்தால் படத்தில்  சத்யா என்கிற பெயரிலும் அஜித் நடித்திருந்தார். 

இந்நிலையில், வலிமை படத்தில் அஜித் ‘ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்’ என்கிற பெயரில் நடித்து வருகிறாராம். இந்த தகவல் வெளியே கசிந்தவிட இன்று காலை முதல் #ஈஸ்வரமூர்த்திIPS என்கிற ஹேஷ்டெக்கில் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News