Categories: Cinema News latest news

வாவ்!.. நடுக்கடலில் ஷாலினியுடன் ரொமான்ஸ் பண்ணும் அஜித்.. வைரல் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். அடுத்த சூப்பர்ஸ்டார் என பேசப்பட்டு வரும் விஜய்க்கு டஃப் கொடுக்கும் நடிகர் இவர். சினிமாவில் எந்த பின்னணியும் இன்றி நுழைந்து, வாய்ப்பு தேடி அலைந்து, ஹீரோவாக நடிக்க துவங்கி, பல வெற்றி மற்றும் தோல்விப்படங்களை கொடுத்து பின்னர் ஒரு இடத்தை பிடித்தவர்.

ajith

தமிழ் சினிமாவில் ஸ்டைலீஷான ஆக்‌ஷன் ஹீரோவாக தற்போது மாறியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான விஸ்வாசம், துணிவு ஆகிய படங்கள் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது.

இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது ஷாலினியுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை அஜித் வழக்கமாக கொண்டுள்ளார். அடுத்த படப்பிடிப்பு இன்னும் துவங்காத நிலையில் குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில், சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு ஸ்டைலீஷான லுக்கில் ஷாலினியுடன் படகில் ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ajith

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா