">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நடிகருடன் வீடியோ கால்…சர்ப்பரைஸ் கொடுத்த தல அஜித்….வைரலாகும் போட்டோ
நடிகர் அஜித் மற்றொரு நடிகருடன் வீடியோ காலில் பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்க, நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்டது. ஆனால், 100 பேரைக் கொண்டு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளதை அடுத்து படிப்படியாக படப்பிடிப்பிற்கான வேலைகள் துவங்கியது.
இதைத்தொடர்ந்து ஹைதராபாத் ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அப்படத்தில் அஜித்தின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிராகாமுடன் அஜித் வீடியோ காலில் பேசிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அஜித் என்ன பேசினார் என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், வேதாளம் படத்தில் ஹிந்தி ரீமேக்கில் ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளார். எனவே, அப்படம் தொடர்பாகவே அஜித் அவருடன் பேசியிருப்பார் என கருதப்படுகிறது.
Exclusive Pic : #ThalaAjith Video Call With John Abraham #Valimai pic.twitter.com/78lZVrZpNR
— Dheena Shankar (@Dheena_shankar) November 4, 2020