ஷூட்டிங்ல மட்டுமில்லை.. வீட்டிலும் அப்படிதான் இருப்பாரு!.. அஜித் பற்றி கசிந்த தகவல்!...

by Murugan |
ajith
X

Ajithkumar: அஜித் மிகவும் பண்பாவனவர், நாகரீகமானவர், எளிமையானவர், ஜென்டில்மேன் என்றெல்லாம் அவருடன் பழகியவர்களும், அவருடன் திரைப்படங்களில் வேலை செய்தவர்களும் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். பல பிரபலங்கள் இதுபற்றி ஊடகங்களிடம் பேசி இருக்கிறார்கள்.

அஜித்தின் ரசிகர்கள்: அமராவதி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி பல காதல் கதைகளில் நடித்து ஒரு கட்டத்தில் பக்கா ஆக்சன் மற்றும் மாஸ் ஹீரோவாக மாறியவர்தான் அஜித்குமார். தீனா படத்திற்கு பின் இவரை அவரின் ரசிகர்கள் ‘தல’ என்றே அழைத்து வந்தனர். அஜித்தின் படம் பொங்கலுக்கு வெளியானால் அதை ‘தல பொங்கல்’ என அவரின் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

சமீபத்தில்தான் என்னை அப்படி அழைக்காதீர்கள் என சொன்னார் அஜித். அஜித் மற்ற நடிகர்கள் போல் இல்லை. நடிகனை நம்பி அவன் பின்னால் போகக்கூடாது.. நடிகனை கடவுளை போல நினைக்கக் கூடாது. இந்த ரசிகர் மன்றம், பேனர், கட் அவுட் வைப்பது, வேலையை, தனது குடும்பத்தை விட்டு தனக்கு பிடித்த நடிகருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற எதையுமே அவர் விரும்பியது இல்லை.


அஜித் வேறமாதிரி: ‘அஜித் வாழ்க.. விஜய் வாழ்க என சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழ்வீர்கள்?’ என திரையுலகில் கேட்ட ஒரே நடிகர் அஜித் மட்டுமே. ரஜினியோ, விஜயோ இந்த கேள்வியை ரசிகர்களிடம் எப்போதும் கேட்டதில்லை. கேட்கவும் மாட்டார்கள். ஏனெனில், தனது வண்டி ஓடுவதே ரசிகர்களால்தான் என அவர்களுக்கு தெரியும்.

ஆனால், அஜித் அப்படி இல்லை. ‘சினிமாவில் நடிப்பது என் தொழில், அது என் வேலை. அதை நான் செய்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்.. படம் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்பதுதான் அவரின் ஸ்டேட்மெண்ட்டாக இருக்கிறது. இந்நிலையில், ஊடகவியலாளர் ஒருவர் சமீபத்தில் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

அஜித் வீட்டு பணியாளர்கள்: அஜித் வீட்டில் காலை எழும்போது அவரின் வீட்டில் வேலை செய்பவர்கள் அவருக்கு காபி கொடுப்பார்கள். அப்போது அவர்களுக்கு குட்மார்னிங் சொல்வார் அஜித். ஏதோ சிந்தனையில் அவர்கள் குட்மார்னிங் சொல்லவில்லையென்றால் அவர்களுக்கு ஏதோ பிரச்சனை என யோசித்து அதுபற்றி அவர்களிடம் விசாரிப்பார். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை எனில் உடனே சரி செய்துவிடுவார்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story