ஷாலினியுடன் தீபாவளி கொண்டாடிய அஜித்!.. வெளியான போட்டோ.. குவியும் லைக்ஸ்!...
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித் குமார். அமராவதி படத்தில் நடிக்க தொடங்கி குட் பேட் அக்லி வரை பல திரைப்படங்களிலும் நடித்து விட்டார். விஜய்க்கு பின் அஜித்துக்கே அதிக ரசிகர்களும் இருக்கிறார்கள்.
சினிமாவில் நடித்தாலும் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் அஜித் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியை தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று கொடியசைத்து துவங்கி வைத்தார். அப்போது அஜித்தும் விஜயும் நெருக்கம் காட்டிய புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
அடுத்து அஜித் டேர் டெவில் என்கிற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை அவரின் மனைவி ஷாலினி தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது..

இந்நிலையில்தான் தீபாவளியை தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் அஜித் கொண்டாடியிருக்கிறார். இது தொடர்பான ஒரு புகைப்படத்தை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
