Categories: Cinema News latest news

150 கோடியில் இருந்து 30 கோடியாக சம்பளத்தை குறைத்த நடிகர்! யாருப்பா அந்த குலசாமி?

Akshay Kumar: இப்போது தமிழ் சினிமா சிக்கலான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் ஒருங்கிணைந்து வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். அதனால் பாதிக்கப்படுவது சின்ன சின்ன டெக்னீசியன்களும் பெப்சி தொழிலாளர்களும்தான் என்பதை ஏன் தயாரிப்பாளர் சங்கம் புரிந்து கொள்ள மறுக்கிறது என பல நடிகர்கள் கூறிவருகிறார்கள்.

இதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான தனஞ்செயன் பல்வேறு விஷயங்களை கூறினார். அதாவது 2 கோடியில் இருந்து 200 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர்கள் தயாரிப்பாளர்களின் நிலைமைய புரிந்து கொள்வதில்லை. ஒரு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து முடித்த பின்னர் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருடன் உட்கார்ந்து பேச வேண்டும்.

இதையும் படிங்க: கோட் – தங்கலான் படத்தை வச்சி கங்குவாவை ஹிட் அடிக்க பிளான்!. இது செம ஸ்கெட்ச்சா இருக்கே!..

படம் வெற்றியா? தோல்வியா? லாபம் எவ்வளவு? நஷ்டம் எவ்வளவு? என்பதை கேட்டு தயாரிப்பாளரின் கஷ்டத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும். ஒருவேளை அந்தப் படம் தோல்வி படமாக அமைந்தால் அந்த நடிகர் ‘அடுத்த படத்தில் நடித்துக் கொடுக்கிறேன். சம்பளத்தை பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம்’ என கூறி தயாரிப்பாளருக்கு ஒரு ஆதரவாக இருக்க வேண்டும்.

ஆனால் நம் நடிகர்கள் படத்தில் நடித்ததோடு சரி. சம்பளம் கையில் கிடைத்து விட்டதா? அடுத்த படத்தை நோக்கி சென்று விடுகின்றனர். இயக்குனர்களும் அடுத்த படத்தை எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். மேலும் சில நடிகர்கள் ப்ரோமோஷன் பக்கமே வருவது கிடையாது.

இதையும் படிங்க: நாங்க பெருசா பண்ணிட்டு இருக்கோம்… கோட் தயாரிப்பாளர் போஸ்டால் எக்ஸ் தளமே சூடா இருக்கே!..

ஆனால் அதில் ஒரு சில நடிகர்களான சூர்யா, கமல், விக்ரம் இவர்கள் ப்ரோமோஷனில் கலந்து கொள்கின்றனர். மற்ற நடிகர்கள் என்ன ஏது என்று கேட்பதே இல்லை. பொதுவாக ஒரு நடிகர் அவர்கள் நடிக்கும் படத்தை தன் சொந்தப் படமாக எண்ண வேண்டும். அப்படி யாரும் எண்ணுவது இல்லை.

இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாரை பற்றி சொல்லவேண்டும். 150 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர் ஒரு படம் படு தோல்வி அடைய அடுத்த படத்திற்கு 30 கோடியாக அவருடைய சம்பளத்தை குறைத்திருக்கிறார். அந்தப் படம் ஹிட்டானால் லாபத்தில் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று கூறினாராம்.

akshay

அப்படி யாரும் நம் தமிழ் சினிமாவில் இல்லையே. அதனால்தான் இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்திருக்கிறது. அதுவும் ஆகஸ்ட் 31 வரை ஏற்கெனவே படப்பிடிப்பை ஆரம்பித்த படங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம். ஆனால் ஆகஸ்ட் 15க்கு பிறகு புதியதாக படப்பிடிப்பை தொடங்கக் கூடாது. அக்டோபர் மாதத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வந்துவிடும். இல்லாவிடில் ஒட்டுமொத்த சினிமாவையே நிறுத்திவிடுவோம். ஆனால் அந்த நிலைமைக்கு போக கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் படத்துல கண்ணியம் இருக்கு! ஆனா அவர் படத்துல? ஐயோ வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டார் போல

 

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini