×

நீங்க மனிதன் அல்ல... அதற்கும் மேல.. புகழ்ந்து தள்ளும் பணியாளர்கள்! எதற்கு தெரியுமா?

கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய பணியாளர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளார்.

 
Times-Allu-Arjun-Beat-Arjun-Kapoors-Style-Game1200_5f3cae3a00738_1200x900

கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய பணியாளர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையால் பணமிருந்தும் மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் மக்கள் அல்லாடி பார்க்க முடிகிறது. இந்நிலையில் மக்கள் மத்தியில் நிலவும் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சங்களை போக்க அரசாங்கமும், மருத்துவர்களும் முயற்சித்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு, பொது மக்களையும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அண்மையில் கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் வேலை செய்யும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களை கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு வலியுறுத்தினார். 

அதனை தொடர்ந்து தற்போது தன்னிடம் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

அண்மையில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்த நடிகர் அல்லு அர்ஜுன், வீட்டுத் தனிமையில் இருந்து மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி வருவதாகவும், தான்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். 

அத்துடன் வாய்ப்பு கிடைக்கும் போது தடுப்பூசி போட்டு கொள்ளுமாறும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் கொரோனாவில் இருந்த மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய பணியாளர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் தடுப்பூசி போடும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News